IP AND CREATIVITY
-Team IP Dome

வளர்ந்து வரும் தொழில் நுட்பமும், பெருகி வரும்
நுகர்வோரும் இன்றைய வியாபார உலகில் நிறைய சாத்தியக்கூறுகளை உருவாக்கி வைத்திருக்கின்றன.
புதிய கண்டுபிடிப்புகள், நுகர்வோரின் தேவைகளை நியாயமான முறையில் பூர்த்தி செய்யும்
என்றால் என்ன விலை கொடுத்தும் வாங்க மக்களும், நிறுவனங்களும் தயாராக
இருக்கிறார்கள். புதிய கண்டுபிடிப்புகளுக்கு, செயல்முறைகளுக்கு, உத்திகளுக்கான
தேவை பெருகி வருகிறது. இந்தத் தேவைகள் சரியான முறையில் நிறைவேற்றப்பட வேண்டுமானால்
அதற்கு இணையாக படைப்பாற்றலும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.
படைப்பாற்றல் (creativity) அல்லது ஆக்கதிறன் என்பது புதிய கருத்துக்களை, அல்லது பொருட்களை ஆக்க கூடிய சிந்தனையையும் அதைச் செயற்படுத்த வல்ல ஆற்றலையும் குறிக்கிறது. காப்புரிமை பெறாதபோது
செல்வமும் புகழும் தகுதியற்றவர்களைச் சென்றடைகிறது. போலிகள் பெருக வழி வகுக்கிறது.
இது படைப்பாற்றலை, ஆக்கபூர்வமான சிந்தனைப் போக்கை தவறான முறையில் பாதிக்கும்.
தன் படைப்பாற்றலால், சிந்தனை முயற்சியால் உருவான ஒரு
பொருள் அல்லது செயல்முறைக்கான பலன் வேறு யாருக்கோ போய்ச் சேருமென்றால் அந்தப்
படைப்பாளி அல்லது நிறுவனம் எவ்வாறு தொடர்ந்து படைப்பாற்றலுடன் செயல்பட இயலும்?
சரியான
காப்புரிமை இருக்கும் பட்சத்தில் படைப்பாற்றல் ஊக்குவிக்கப்படுகிறது. புதிய
ஆய்வுகளுக்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கிறது. எனவே படைப்பாற்றலை ஏதுவாக்குவதில்
காப்புரிமை சட்டத்திற்கும் ஒரு முக்கிய பங்குண்டு.
www.ipdome.in
No comments:
Post a Comment