Wednesday, 11 April 2012





பதிப்புரிமை
-Jagathis.S

  

பதிப்புரிமை (Copyright) என்பது ஒரு எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ தமது அசலான படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும்.இவ்வுரிமையானது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்துதலையும் உள்ளடக்கியதாகும். இவ்வுரிமை ஒருவரின் ஆக்கத்திறமையைப் பாராட்டவும், பிறரின் ஆக்கத்தை ஊக்குவிப்பிதற்காகவும் தரப்படுகிறது. சிற்சில தவிர்ப்புச்சூழல்கள் தவிர இப்படைப்புகளைப் பயன்படுத்த உரிமையாளரின் அனுமதி பெறுவது அவசியம்.இவ்வனுமதி தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கலாம்.

காப்புரிமை பாதுகாப்பது ஒருவரின் எண்ணத்தின் வெளிபாடுகளை; எண்ணங்களை அல்ல. எடுத்துக்காட்டாக, ஒருவர் காப்புரிமை பெற அவர் மனதில் அழகிய கதைக்கரு உருவாவது மட்டும் போதாது. அக்கரு ஒரு கதையாகவோ, ஒவியமாகவோ அல்லது எதாவது ஒரு வடிவமாக வெளிப்பட வேண்டும். காப்புரிமை பெற வெளிப்பாடே போதுமானது. பல நாடுகளில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

முந்திய காலங்களில் பதிப்புரிமை சட்டம் புத்தகங்கள் நகலெடுப்பதற்கு எதிராக மட்டுமே பயன்பட்டது.காலம் செல்லச்செல்ல மொழிப்பெயர்ப்பு மற்றும் பிற சார்ந்த ஆக்கங்களிலும் இச்சட்டம் இப்போது பயன்படுத்தப்படுகிறது.தற்போது நிலப்படம், இசை, நாடகம், புகைப்படம், ஒலிப்பதிவு, திரைப்படம், கணினி நிரல் ஆகியவையும் இதில் அடக்கம்.

பதிப்புரிமையுன்அமைப்பு


உரிமையளர்களீன் பங்கு

உரிமையாளர்கள் தேர்ந்துஎடுக்கும் பதிப்பு உரிமம் இதற்கு முன்பு யாராலும் பயன் படுத்த படாதவையாகவும்,பொதுவான உபயோகத்தில் இல்லாதவையாகவும் இறுக்க வேண்டும்.     

பதிப்புரிமையுன் விதி 

பதிபுரிமைக்கு ஒரு சில வழிமுறைகளும், விதிகளும் கையாளபடுகின்றன. 

பதிப்பு உரிமத்தின் விதிகள் அனைத்தும் தனி உரிமைகள் சம்பந்தமான மற்றும் கிரிமினல்   சட்டத்தை மீறிய பிரிவுகளை சார்ந்தே அமையும்.

(i) பொதுவாக  பதிப்பு உரிமத்தின் ஆயுள்காலம்  60 வரை நிர்ணைககப்பட்டுள்ளது

(ii) பதிப்பு உரிமையுன் விதிக்கு உட்டபட்ட பதிப்பு படைப்பாளியுன் ஆயுள் காலம் வரை நீடிக்க்கும்.

(iii)படைப்பாளின்  ஆயுள் காலத்திற்கு பிறகு  உரிமையாளர் பெயரில் பதிப்பு உரிமையை மாற்றிக்கொள்ள முடியும் 
  
பதிப்புரிமையுன் பயன்பாடுகள்

(i)            பதிப்புரிமை   ஒருதனித்துவத்தை உண்டாக்கும்  
(ii)          வளர்ச்சியை பாதுகாக்க வல்லது.
(iii)        பதிப்புரிமை என்பது தனி அங்கிகாரத்தை கொடுக்கும்.
(iv)        படைப்பின் தரத்தை   பாதுக்காக சிறந்த யுத்தி .
(v)         சட்ட பூர்வமான  அங்கிகாரத்தை  அடைந்ததற்கான சான்று.


அடிப்படையாக வழங்கப்படும் பதிப்புரிமைகள் :
அறிவுப்பூர்வமான, உணர்வுபுர்வமான அதாவது பட்டு , கட்டுரை, படம் ,நடனம்,இசை,ஒலி,ஒளிபதிவுகள்,ஓவியம்,புகைப்படம்,நிழற்படம்,மென்பொருள்,தொலைகாட்சி,மற்றும் வரைகலை போன்ற அணைத்து வகையான படைப்புகளுக்கு பதிப்புரிமை வழங்கப்படும்.

பதிப்புரிமையுன் நலன்களை அறிவோம்  அறிவுபூர்வமாக,
நமது உணர்வுபூர்வமான படைப்பின் தரத்தை உணர்த்துவோம் சட்டரீதியாக 

www.ipdome.in

No comments:

Post a Comment